Chat whatsapp 📞

Annadhanam

img
பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன் பசியாற்றுவிப்பவன் -மாமனிதன் பசியாறியவர்களைக் கண்டு மகிழ்பவன் -மகான் பசியாறியவர்களால் பராட்டப்படுபவன் -கடவுள்

*அருட்பெருஞ்சோதி நல்ல உள்ளங்களின் துணை வேண்டும் ஏழைகளின் பசியாற்ற..* *ஏழை,எளியவர் பசிதீர அன்ன தானம்:* தனியொரு ஜீவனாய் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளால் நல்ல உள்ளங்களை இணைத்து கடந்த நான்கு வருடங்களைக் கடந்து தினசரி நூற்றுக்கணக்கான மக்களின் பசி போக்கி வருகின்ற... ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்திற்கு தங்களின் மேலான துணைவேண்டி எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நல்உள்ளங் கொண்ட சமுதாய அக்கறைக் கொண்ட ,சமுதாயத்திற்கு தனது கடமைஆற்ற ,இறையை ஏழையின் பசியில் காணும் அன்பர்கள் , , சமுதாய சிந்தனையோடு, ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்தின் ஜீவகாருண்ய சேவைத் தொடர்ந்து தடையில்லாமல், சீரோடும் சிறப்போடும் நடைபெற, *இறையருள் பெற்ற உள்ளங்களின் கருணைகளோடு...

img

பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன் பசியாற்றுவிப்பவன் -மாமனிதன் பசியாறியவர்களைக் கண்டு மகிழ்பவன் -மகான் பசியாறியவர்களால் பராட்டப்படுபவன் -கடவுள்,

  • நடமாடும் அன்ன தருமச்சாலையின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில் சமைத்த உணவுகளை வாகனத்தில் எடுத்து சென்று சாலை ஓரங்களில் இருபவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.
  • ஆவடி பகுதியில் உள்ள கோவில்களுக்கு திருவிழாக் காலங்கள்,கூட்டுவழிபாடு மற்றும் சிறப்பு நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வகையான அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.
  • சன்மார்க்கசங்கங்கள் நடத்தும் கூட்டங்கள், சத்சங்கங்கள் மற்றும் சன்மார்க்க விழாக்களுக்கு சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது..
  • ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வித்து சிறப்பு உணவு அளிக்கபடுகிறது.
  • தினமும் பகல் 11.30 மணிக்கு 150ஏழைகளுக்கு மதிய உணவும், காலையில் சாலைவாழ் மக்களுக்கு காலை உணவும் தருகின்றோம். மாலை நேரம் தினம் 25 மாணவ,மாணவிகளுக்கு பள்ளிப்பாடம் டியுசனும்,அவர்களுக்கு இரவு சிற்றுண்டியும் அளித்து வருகின்றோம். தீபாவளி,பொங்கல் போன்றப் பண்டிகைக் காலங்களில் 100 பேருக்கு புத்தாடைகள் வழங்கிவருகின்றோம்.
  • கடந்த எட்டு வருடமாக வள்ளலாருக்கு உகந்த நாளான தைப்பூசம்,மற்றும் வள்ளலார் பிறந்ததினம் இந்த இரண்டு நாட்கள் மக்கள்"நல உதவிகளும் ,பொது விருந்துணவும் நடத்தி வருகின்றோம்.
  • புயல்,மழை வெள்ளம் காலங்களில் பாதிக்கப்பட்ட ஏழை,எளியவருக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றோம்.
img
img
img
  • ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்தின் சிறந்த அன்றாத சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் "சன்மார்க்க சான்றோர்" விருதை அதன் நிறுவனர் திரு.வசந்தி ஜெயக்குமார் வழங்கப்பட்டது. நாள்: 27.8.2023 இடம்: திருவள்ளுவர் நிக்ஷேபு மண்டபம், வள்ளலார் 200ஆம் ஆண்டு விழா.
img
  • நமது ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்தின் சிறந்த அன்றாத சேவையை பாராட்டும் தமிழக அரசு "சன்மார்க்க சான்றோர்கள்" விருது வழங்கியது. 27.8.2023 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் விருது பெற்றது, திரு.வசந்தி ஜெயக்குமார், பசியாற்று மையத்தின் நிறுவனர். வள்ளலார் 200ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
img
  • இது அன்றும் மதுராந்தகம் Dr.APJ அப்துல்கலாம் அறக்கட்டளையின் 7ஆம் ஆண்டு விழாவினை துவக்கி அவர்களால் MAN OF THE MONTH விருது வழங்கப்பட்டது. வள்ளலார் விதி பசியாற்று மையத்திற்கு கிடைத்த பெருமை இது. துணையின்றி சமூக சேவைகளை செயல்படுத்தும் திரு.வசந்தி ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
img
img
img